அதிக சம்பளம் வாங்குவதில் NO.1- ன்னா ரஜினியை.? பின்னுக்கு தள்ளி முன்னேறிய விஜய்.! 66 வது படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்க உள்ளார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் சமீப காலமாக நம்பர் ஒன் இடத்தை பிடிக்க பலரும் போராடுகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் அதற்கு வழி விடாமல் ரஜினியும் தற்போது பயணிப்பதால் போட்டியில் அனல் பறக்கிறது.

ரஜினி தற்போது அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஒரு புதுமுக இயக்குனர் உடன் கை கோர்த்துள்ளார் இந்த திரைப்படம் ரஜினி இது மிகப்பெரிய ஒரு சவாலான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் அனுபவம் இல்லாத ஒரு இயக்குனருடன் கைகோர்த்து மிகப்பெரிய ரிஸ்க் எடுக்க உள்ளார் என்று  கூறுகின்றனர்.

இது இப்படி இருக்க விஜய்யோ அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களில் தேர்வு செய்து நடித்து வருவதோடு அந்த படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்ல தயாரிப்பு நிறுவனத்தையும் மிக சூப்பராக செலக்ட் செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் எடுக்க உள்ளது இது இப்படியிருக்க அடுத்ததாக தனது திரைப்பட  தயாரிப்பாளரையும் தேர்வு செய்து உள்ளார்.

முதலில் தேனாண்டாள் பிலிம்ஸ் ஒரு படத்தை கொடுக்க இருந்தார் ஆனால் விஜய்யோ அதை மறுத்து விட்டு தற்போது தெலுங்கு சினிமாவில் நிறுவனம் ஒன்ரறுக்கு தற்பொழுது அந்த படத்தை கொடுத்திருக்கிறார் இந்த திரைப்படத்தை தில் ராஜு என்பவர் மிகப்பெரிய ஒரு பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை எடுக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்ற வலம் வரும் வம்சி பைடிபல்லி என்பவர் இயக்கிய ரெடியாக இருக்கிறார் இந்தத் திரைப்படத்தின் கதையை தற்போது அவர் கான்பரன்ஸ் கால் மூலமாகவே மொத்த கதையையும் விஜய்யிடம் சொல்லிவிட்டாராம்.

சம்பளமும் தற்போது அடுத்த கட்டமாக சம்பளமும் பேசப்பட்டது. போனபடத்தில் 100 கோடி வாங்கிக் கொண்டிருந்த விஜய் தற்போது இந்தத் திரைப்படத்திற்காக முதல் முறையாக 120 கோடியை சம்பளமாக கேட்டு உள்ளார். தயாரிப்பு நிறுவனமும் தற்போது  ஓகே சொல்லி உள்ளதாக தகவல்.

இதனால் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் என்ற பெருமையை தற்போது விஜய் கைப்பற்றி உள்ளார். இதற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்திற்காக சுமார் 114 கோடியை வாங்கி தன்வசப்படுத்தி முதல்வராக இருந்த நிலையில் தற்போது அவரையே ஓவர் டேக் செய்து உள்ளார் விஜய்.

Leave a Comment