தியேட்டரில் டிக்கெட் விற்கும் “நிவேதா பெத்துராஜ்” அவருக்கு இப்படி ஒரு நிலைமையா.? புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்

0
nivetha-pethuraj
nivetha-pethuraj

தென்னிந்திய சினிமா உலகில் இன்று தவிர்க்க முடியாத ஒரு நடிகை நிவேதா பெத்துராஜ். இவருடைய சொந்த ஊர் மதுரை ஆனால் இவர் பிசினஸ்மேன் ஆக இருந்ததால் ஒரு இடத்தில் நிலையாக நிற்க முடியவில்லை தமிழ்நாட்டில் சில இடங்களில் மாறிய இவரது குடும்பம் ஒரு கட்டத்தில் துபாயில் செட்டில் ஆகியது.

இதனால் நிவேதா பெத்து ராஜ் பள்ளி படிப்பு கல்லூரி போன்றவற்றை வெளிநாட்டிலேயே முடித்தார். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் சினிமாவில் ஆர்வம் காட்டினார் அப்படித்தான் ஒரு நாள் தெருக்கூத்து என்னும் படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் அதன் பிறகு இவர் தமிழில் டிக் டிக் டிக், சங்கத் தமிழன்..

விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்ட இவர் ஒரு கட்டத்தில் தெலுங்கிலேயும் கால் தடம் பதித்து அங்கு எடுத்த வேகத்திலேயே படங்களில் கிளாமர் காட்டி நடித்ததால் இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களும் உருவாகின. இப்பொழுது கூட தெலுங்கில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்துள்ளது.

அந்த வகையில் இவர் நடிப்பில் தஸ் கா தம்கி என்ற திரைப்படம் தயாராகி உள்ளது. படம் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படும் ஜோராக நடைபெற்று வருகின்றன மேலும் தஸ் கா தம்கி படத்தின் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் ஹீரோயின் நிவேதா பெத்துராஜ்  திரையரங்கிற்கு சென்று தனது படத்தின் டிக்கெட்டை விற்பனை செய்து உள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்த படத்தின் டிக்கெட் வாங்கியுள்ளனர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கத்தில் காட்டு தீ கோலாபோல பரவி வருகிறது.

nivetha-pethuraj
nivetha-pethuraj
nivetha-pethuraj
nivetha-pethuraj