நடிகர் சித்தார்த் நடித்த 180 திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நித்யா மேனன், இவர் கொஞ்சம் கொழுக் மொழுக்குன்னு குண்டான தோற்றத்தில் இருப்பார், தமிழ் தெலுங்கு மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார், அதேபோல் முன்னணி நடிகரான விஜய் ,விக்ரம், சூர்யா ஆகியோருடன் நடித்துள்ளார்.
நடிகை நித்யா மேனன் தனது உடலை கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் என்று பெரிதாக எதுவும் நாட்டம் இல்லாமல் இருந்தார் அதனால் சில நாட்களுக்கு முன்பு உடல் எடை அதிகரித்து குண்டாகி விட்டார், அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அனைவரும் கிண்டல் அடித்தார்கள், அதற்கு நித்யாமேனனும் நான் குண்டாக இருப்பது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை நான் குண்டாக இருப்பதால் எனக்கு எந்த தடையும் இல்லை படத்திற்காக தான் நான் அவ்வாறு இருந்தேன்.
இனிவரும் படங்களில் என்னை ஒல்லியாக தான் காண்பீர்கள் என தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலளித்தார், தற்போது யோகா பயிற்சி, உடற்பயிற்சி என அனைத்தையும் கடைபிடித்து தனது மேனியை கட்டுக்கோப்புடன் மாற்றியுள்ளார் அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

