நடிகை என்று கூட பார்க்காமல் இசை வெளியீட்டு விழாவில் கேவலமாக நடந்து கொண்ட சுசீந்திரன்.! வைரலாகும் வீடியோ.

தென்னிந்திய சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகர் என்றால் அது சிம்பு தான்,  இன்று வரை சினிமாவில் அவர் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. என்னதான் விமர்சனம் எழுந்தாலும் சிம்பு தனக்கான இடத்தில் தான் இதுவரை நிலைத்து நிற்கிறார்.

அதற்கு முழுக்க முழுக்க காரணம் சிம்புவின் ரசிகர்கள் தான் சிம்பு எந்த இடத்தில் இருந்தாலும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் சிம்பு ரசிகர்கள் அதுதான் உண்மையான ரசிகர் பட்டாளம்.

இந்த நிலையில் சிம்பு வந்தா ராஜாவா தான் வருவேன்,  செக்கச்சிவந்த வானம் ஆகிய திரைப்படங்களின் மூலம் மீண்டும் சினிமாவில் புத்துணர்ச்சியுடன் குதித்துள்ளார்.  இந்த திரைப்படங்களை தொடர்ந்து சிம்பு தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து வெங்கட்பிரபுவின் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார்.

கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது அதற்கிடையில் சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிம்பு அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது.  இந்நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

ஈஸ்வரன் படம் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் மற்றும் ஏமோஷன், காதல் ஆக்ஷன் காமெடி, என அனைத்தும் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது,  இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்,  தமன் இசையமைக்க திரைப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி எடிட் செய்கிறார்.

ஈஸ்வரன் படப்பிடிப்பு திண்டுக்கல்லை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது அதனால் முழுக்க முழுக்க கிராமத்து கதையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்,  இந்த நிலையில் படத்தை வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட இருக்கிறார்கள்.

eswaran
eswaran

இந்த நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் படத்தின் நாயகி நிதி அகர்வால் கலந்து கொண்டுள்ளார் அவர் பேசும்போது அருகில் சுசீந்திரன் நின்றுகொண்டு சிம்பு மாமா ஐ லவ் யூ சொல்லு என அவரை பார்த்து கூறிக் கொண்டே இருக்கிறார். அதனால் நடிகை நீது அகர்வால் மிகவும் சங்கடத்திற்கு ஆளானார்.

https://twitter.com/sujanvj/status/1345455556052578307?s=20

அதுமட்டுமில்லாமல் சுசீந்தரன் ஒரு படி மேலே சென்று பெல்லி டான்ஸ் என கேட்டுள்ளார்,  அதற்கு சிம்புவை போல் விரலில் சைகை செய்து முத்தமிட்டார்,  அப்படியும் விடாமல் சுசீந்திரன் பெல்லி டான்ஸ் ஆட வில்லை என்றால் அடுத்த படத்தில் செலக்ட் செய்ய மாட்டேன் என மேடையிலேயே கூறியுள்ளார்.

சுசீந்திரன் இவ்வாறு நடந்துகொண்டது மிகவும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது,  நிதி அகர்வால் ஏற்கனவே ஜெயம் ரவியின் பூமி திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த திரைப்படம் ஜனவரி 14ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment