2வது முறையாக பெற்றோரான கணேஷ்-நிஷா தம்பதியினர்.. நெகிழ்ச்சியுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்

Nisha – Ganesh: சின்னத்திரை சீரியல்களின் மூலம் பிரபலமாகி பிறகு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய அவர்தான் நடிகை நிஷா. தற்பொழுது நிஷா- கணேஷ் தம்பதியினருக்கு ஏற்கனவே பெண் குழந்தை இருந்ததை தொடர்ந்து மீண்டும் பெற்றோர்கள் ஆகியுள்ளனர்.

சின்னத்திரை நடிகை நிஷா சினிமா நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைப்பெற்றதை தொடர்ந்து இந்த தம்பதியினர்களுக்கு சமைரா என்ற நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக நிஷா கர்ப்பமான நிலையில் நேற்றைய தினம் அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது மனைவியுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் கணேஷ் வெங்கட்ராமன் பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் கணேஷ், நிஷா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்துடன் :கணேஷ் வெங்கட்ராமன் நான் நிறைய ரோல்களை செய்திருக்கிறேன் ஆனாலும் அப்பா என்கின்ற ரோல் எதனுடன் ஒப்பிட முடியாது: என தனது நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார்.

nisha ganesh
nisha ganesh

இவ்வாறு இந்த தம்பதியினர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் தனது மகனின் விரல்களைப் பிடித்தபடி கணேஷ் உள்ளார். பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் கடைசியாக விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் நடித்திருந்தார்.