தனது உடைகளை விற்று ஊரடங்காள் அவதிப்படும் மக்களுக்கு உதவி செய்யும் நிக்கிகல்ராணி.! இந்த முயற்சியும் நல்லாத்தான் இருக்கு

கடந்த இரு வருடங்களுக்கு மேலாக கொரோனா என்ற ஒன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. அதோடு நாள்தோறும் பல கோடி உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ மனைகளில் படுக்கையறை இல்லாமல் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டும் வருகிறார்கள் அதோடு ஒரு பக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது முழு ஊரடங்கு போடப்பட்டு உள்ளது எனவே போலீசாரும் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  அத்தியாவசியம் என்று வெளிவரும் அனைவருக்கும் பெரும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் முக்கியமாக இந்தியாவில் தமிழ் நாட்டில்தான் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இது ஒரு பக்கம் மக்களை கொன்று வர இன்னும் ஒருபுறம் ஏழைகள் பசியும் பட்டினி என கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். அத்தியாவசியப் பொருள்களான நல்ல உணவு, உடை இல்லாமல் தவித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித்,சூர்யா, சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிவி வழங்கியுள்ளார்கள்.

இவர்களைத் தொடர்ந்து சில சின்னத்திரை நடிகைகளும் உணவு இல்லாமல் தவித்து வரும் பலருக்கும் தங்களால் முடிந்த உணவை தரமானதாக செய்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடப்பவர்கள் உணவு அளித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் நிக்கி கல்ராணி புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளார். அதாவது தனியார் அமைப்பு ஒன்று அத்தியாவசிய பொருள்கள் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வரும் பலருக்கும் உதவும் வகையில் பவுண்டேஷன் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

அதாவது பணக்காரர்களாக இருப்பவர்கள் கொடுக்கும் ஆடைகள், பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து பணம் ஆக்கப்பட்டு அந்த பணத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவி வருகிறார்கள்.  அந்த வகையில் இந்த அமைப்பின் மூலம் நிக்கி கல்ராணி  நல்ல தரமானதாக உள்ள ஆடைகள், அணிகலன்கள், புத்தகங்கள், காலணிகள்  போன்ற பலவற்றையும் அந்த பவுண்டேஷனிடம் கொடுத்து உள்ளார்.

nikki kalrani

அதனை அவர்கள் விற்று பணமாக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவார்கள்.  இந்த வகையில் நிக்கி கல்ராணி வீடியோவில் என்னிடம் அளவுக்கு அதிகமாக இருப்பதால் தேவையானது போக மீதி உள்ள அனைத்து ஆடைகளையும் கொடுத்திருப்பதாக கூறி உள்ளார். அதோடு அனைவரும் இதேபோல் வைத்திருந்தால் நீங்களும் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Comment

Exit mobile version