அதிரடி கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யப்போகும் உதயம் NH4 பட நடிகை.!

0
arshitha
arshitha

ஆஷ்ரிதா ஷெட்டி தமிழ் சினிமா நடிகை ஆவார், இவர் உதயம் nh4 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் அதனை தொடர்ந்து ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இந்திரஜித், நான்தான் சிவா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவருக்கு தற்போது 26 வயதாகும்.

ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் தனது காதலரை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார், இரு வீட்டார் சம்மதத்துடன்னும், வருகின்ற டிசம்பர் 2ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் இந்த திருமண விழாவில் பல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, அஷ்ரிதா ஷெட்டி காதலன் வேறு யாருமில்லை பிரபல கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தான்.

இவர்களின் திருமணம் டிசம்பர் இரண்டாம் தேதி நடைபெற இருக்கிறது. மனிஷ் பாண்டே கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர், இவர் ஐபிஎல்லில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு.