அடுத்த ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணியின் கேப்டன் யார் தெரியுமா.? இதொ சென்னை அணியின் உரிமையாளர் அதிரடி அறிவிப்பு.!

0
csk
csk

சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பவர் தல தோனி, இவரை அனைவரும் கூல் கேப்டன் என்று தான் அழைப்பார்கள், ஏனென்றால் வெற்றி அடைந்தாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார். ஆனால் சில கேப்டன்கள் வெற்றி அடைந்தாலும் மிக சந்தோஷத்தில் துள்ளி குதிப்பார்கள். ஆனால் தோனி அப்படி கிடையாது அதனால் தான் இவரை கூல் கேப்டன் என்று அழைக்கிறார்கள்.

அடுத்த ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணியின் கேப்டன் யார் என்ற விவரத்தை சிஎஸ்கே அணியின் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது இந்த மைதானத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார்.

அதுமட்டுமில்லாமல் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநிவாசன் இனி டிஎன்பிஎல் போட்டிகள் கோவையில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவித்திருந்தார், இதனைத்தொடர்ந்து தோனி ஓய்வு பற்றி செய்தியாளர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டார் அதற்கு பதிலளித்த ஸ்ரீனிவாசன். அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்கு கேப்டன் தோனி தான் எனக் கூறினார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பையிடம்  கோப்பையை தவறவிட்டது.