தமிழ் சினிமாவில் வருடத்தின் ஆரம்பத்திலிருந்து வெளியான திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே ஹிட் அடித்துள்ளது அதிலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அரண்மனை 4, கருடன் மகாராஜா ஆகிய திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
அதேபோல் பான் இந்தியா திரைப்படங்களில் கல்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே பிரபலமடைந்தது. அதேபோல் தமிழில் வருடத்தின் முதல் பாதியில் பெரிய பட்ஜெட் திரைப்படம் மற்றும் பெரிய நடிகர்களின் படம் பெரிதாக வரவில்லை ஆனால் இரண்டாவது பாதியை எதிர்நோக்கி பல பெரிய பட்ஜெட் மற்றும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.
அப்படி இருக்கும் நிலையில் வரும் ஐந்து மாதங்களுக்கு மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது அதனால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தை அனுபவிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதன்படி லிஸ்டில் அஜித், விஜய், ரஜினி திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளது.
அந்த வகையில் தனுஷின் ராயன், ரஜினியின் வேட்டையன், விக்ரமின் தங்கலாம், சூர்யாவின் கங்குவா, சிவகார்த்திகேயனின் அமரன், பிரசாந்தின் அந்தகன், விஜய் நடிக்கும் கோட், அஜித்தின் விடாமுயற்சி என பல திரைப்படங்கள் அடுத்தடுத்த வெளியா இருக்கி்றன இதனால் திரையரங்கி் கூட்டம் குவிய இருக்கிறது.
மேலும் இந்த வருடத்தின் அடுத்த பாதியில் ஆட்டநாயகன் யார் என்பதை படம் ரிலீஸ் ஆனால் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.