ஜவான் படக்குழு அதிரடியாக வெளியிட்ட புதிய அப்டேட்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

jawaan
jawaan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லி இவர் தற்பொழுது ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே தமிழ் சினிமாவில் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய வெற்றி கண்டவர் இயக்குனர் அட்லி.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஷாருக்கான் இரண்டு வேடத்தில் நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் வில்லனாக நடித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது இதனை தொடர்ந்து இந்த படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையை தற்போது ஒரு புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது.

அதாவது ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் தருவாயில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது அதுமட்டுமல்லாமல் தற்போது ஜவான் படத்தில் நடித்து வரும் நடிகை நயன்தாராவின் காட்சி படமாக்கப்பட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது அதன் பிறகு தற்போது ஷாருக்கான், விஜய் சேதுபதிக்கும் இடையே சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜவான் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்து விட்டது. இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான்க்கும் இயக்குனர் அட்லிக்கும் இடையே சில மனக்கஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சில வதந்திகள் பரவியது.

இருந்தாலும் படப்பிடிப்பு நிற்காமல் நடந்து கொண்டே வருகிறது இந்த நிலையில் தற்போது இறுதி கட்டப்பட பிடிப்பை நெருங்கி விட்டதால் ரசிகர்கள் அடுத்து அப்டேட்டிற்கு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். விரைவில் ஜவான் திரைப்படம் குறித்து அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.