திகிலில் மிரட்ட வரும் அரண்மனை 3 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்.!

0
aarya
aarya

தமிழ் சினிமாவுலகில் என்னதான் சாதாரண கதை களம் கொண்ட திரைப்படங்களை எடுத்து வெற்றி பெற்றாலும் த்ரில்லர் கதை கொண்டு திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்களில் ஒரு முக்கியமான இயக்குனர்தான் சுந்தர் சி இவரது இயக்கத்தில் த்ரில்லராக அரண்மனை மற்றும் அரண்மனை இரண்டாம் பாகம் வெளியானது இந்த இரண்டு பாகங்களும்ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த இரண்டு படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறாரார் மூன்றாம் பாகத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்க அவருடன் ராசி கண்ணா,ஆண்ட்ரியா,சாக்ஷி அகர்வால்,யோகி பாபு,விவேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படத்தில்.

இந்த மூன்றாம் பாகம் ரசிகர்களிடையே நல்ல ஹிட்டடிக்கும் என சமீபத்தில் ஒரு தகவல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த மூன்றாம் பாகத்தை பற்றி தற்போது ஏதாவது ஒரு அப்டேட் ரசிகர்களுக்கு படக்குழுவினர்கள் வெளியிடுவார்கள்.

என பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மேலும் அரண்மனை மூன்றாம் பாகத்தின் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது என தெரியவருகிறது.