தலைவி திரைப்படத்தில் இருந்து வெளியான வேறலெவல் புதிய அப்டேட்.!

தமிழ் சினிமாவுலகில் நடிகர்கள்,நடிகைகளை பொருத்த வரை பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெயரையும்,புகழையும் வாங்கிக்கொண்டால் உடனே அவர்கள் அரசியலில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் எம்ஜிஆருடன் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இவர் பல படங்களில் எம்ஜிஆருடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் அரசியலில் ஈடுபட்டு பின்பு அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்து வந்தார்.

அவர் மறைந்தாலும் அவரது நினைவாக தற்போதும் ரசிகர்களுக்கு கூர்மைதீட்டும் படியாக தலைவி என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் ரசிகர்களுக்கு சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டது வெளிவந்த நாளிலேயே இந்த ட்ரைலர் பலத்த வரவேற்ப்பை பெற்றது என்று தான் கூற வேண்டும் இந்த திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கானா ரணாவத் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்காக விஷ்ணுவர்தன் இந்தூரி,  சைலேஷ் ஆர் சிங் தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள் மேலும் தலைவி திரைப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jeyalalitha

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி ஒரு தகவல் இணையதளத்தை வேகமாக வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் இந்த படத்தின் அடுத்த அப்டேட் ஆக முதல் பாடலை இன்று படக்குழுவினர்கள் வெளியிடுகிறார்களாம் இந்த பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் மனைவி மற்றும் பாடகியான சைந்தவி ஆகியோர் பாடியுள்ளார்களாம்.

Leave a Comment

Exit mobile version