பத்து தல படத்திலிருந்து வெளியான புதிய அப்டேட்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவர் சிறுவயதிலிருந்து சினிமாவில் நடித்து வரும் நிலையில் இத்தனை ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் சிம்பு அவர்கள் பல நடிகைகளுடன் பல முறை கிசுகிசுக்கப்ட்டு இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஆரம்பத்தில் சிம்புவை பலருக்கும் பிடிக்கும் ஆனால் இடையில் உடல் எடையை அதிகரித்ததால் அவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போனது அதுமட்டுமல்லாமல் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவரை பல்வேறு விதமாக விமர்சித்தனர்.

அதை எல்லாம் கண்டுக்காமல் தன்னுடைய உடல் எடையை மீண்டும் குறைத்து சூப்பராக ஒரு கம்பேக் கொடுத்தார் நடிகர் சிம்பு அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் லாபம் பார்த்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

இதன் பிறகு அடுத்ததாக இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படமும் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று லாபம் பார்த்தது.

இதனை அடுத்து தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக விரைவருப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் நாளை மறுநாள் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

அதாவது பத்து தல திரைப்படத்திலிருந்து அதிகாரபூர்வ அப்டேட் ஒன்று இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது அதனால் ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது அது மட்டும் இல்லாமல் இந்த அறிவிப்பு இசை வெளியீட்டு விழாவாக தான் இருக்கும் என ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகிறார்கள்.

ஆனால் இன்று மாலை 6:00 மணிக்கு தான் தெரியும் இது எந்த அப்டேட் என்று. எதுவாக இருந்தாலும் அது ரசிகர்களுக்கு விருந்தாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment