பத்து தல படத்திலிருந்து வெளியான புதிய அப்டேட்.! இணையத்தில் வைரலாகும் தகவல்கள்…

நடிகர், பின்னணி பாடகர் என தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டு தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் தனது சிறு வயதிலிருந்து சினிமாவில் நடித்து கொண்டே இருக்கும் நிலையில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாலமே இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கபட்டார்.

அதிலும் குறிப்பாக நடிகை நயன்தாரா மற்றும் சிம்புவின் இருவரும் காதலிப்பதாக பல தகவல்கள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது. அதன் பிறகு பல நடிகைகளுடன் கிசிவிக்கப்பட்ட நடிகர் சிம்பு அவர்கள் தன்னுடைய திரைப்படத்தில் கவனம் செலுத்தி வந்தார் ஆனால் தன்னுடைய உடல் எடை அதிகரித்ததால் சரியான பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார் நடிகர் சிம்பு.

அதன் பிறகு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து நடித்து இருந்தாலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்தார் நடிகர் சிம்பு இந்த திரைப்படம் வெளியாகி நூறு கோடிக்கு மேல் வாசல் வைத்த சாதனை படைத்தது மட்டுமல்லாமல் நடிகர் சிம்புவின் இழந்த மார்க்கெட்டை பிடித்து தந்தது.

அதன் பிறகு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நூறு கோடிக்கு மேல் வசதி தேவை நிலையில் இரண்டாவது பாகம் இந்த ஆண்டு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பத்து தல திரைப்படம் வருகின்ற 31ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடந்து முடிந்தது.

இதனைத் தொடர்ந்து இன்னும் வெளியாக குறுகிய காலம் மட்டும் இருக்கும் நிலையில் தற்போது பத்து தல படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் முன்பதிவில் மட்டும் எத்தனை கோடி வசூலித்தது என்பதை குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version