தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கேப்டன் மில்லர் படத்திலிருந்து வெளியான புதிய அப்டேட்.! வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல லாபம் பார்த்தது. இதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் அடைந்து தோல்வியை சந்தித்தது.

அதை தொடர்ந்து கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் வெளியாக காத்திருந்த வாத்தி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த நேரத்தில் அவதார் 2 படம் வெளியானதால் தனுஷின் வாத்தி திரைப்படத்தை வெளியிடாமல் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தனர்.

அந்த வகையில் பிப்ரவரி மாதம் வெளியாக இருந்த வாத்தி திரைப்படம் மறுபடியும் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது வாத்தி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக்கி வரும் நிலையில் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது அவை அனைத்திற்கும் ஒரே நொடியில் பட குழுவினர் தற்போது பதிலடி கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திலிருந்து ஒரு புதிய அப்டேட் வெளியாகும் என்று படகுழுவினர் சமீபத்தில் ஒரு அப்டேட் வெளியாகும் என்று சமீபத்தில் படக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

படக்குழுவினர் சமிபத்தில் அறிவித்த நிலையில்  தற்போது கேப்டன் மிலர் படத்தின் மேக்கிங் கிளிப்ஸ் ஒன்ரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment