20 கோடி கொடுத்து விக்கெட் கீப்பரை வாங்க முயற்சிக்கும் புதிய அணி – அந்த வீரர் யார் தெரியுமா.?

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் சீசன் இதுவரை 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 15வது கட்ட சீசன் மிக விரைவிலேயே தொடங்குகிறது அதற்கு முன்பாக பல்வேறு நிபந்தனைகளை பிசிசிஐ அடுத்தடுத்து வைத்துள்ளது அதாவது இதுவரை 8 அணிகள் விளையாட நிலையில் இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒவ்வொரு அணியும் குறைந்தது நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் மீதி இருக்கின்ற வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டுமென கூறியதை அடுத்து ஒவ்வொரு அணி நிர்வாகமும் சிறந்த வீரர்களை தன்வசப்படுத்த தற்போது ஆலோசனை செய்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது.

புதிய அணிகள் 3 வீரர்களை ஏலத்திற்கு முன்பாக மற்ற அணியிடம் இருந்து பேசி வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பஞ்சாப் அணியில் சிறந்த வீராகவும், கேப்டன்னாகவும் செயல்பட்டு வந்த கே எல் ராகுலை அதிக காசு கொடுத்து எடுக்க அதிகப்படியான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கே எல் ராகுலுக்கு 20 கோடி தர தயாராக லக்னோ அணி ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது . அதுபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டராக இருந்து வரும் ரஷித் கான் எங்கள் அணிக்கு வந்தால் அவருக்கு பதினாறு கோடி தர ரெடியாக இருப்பதாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் எந்த ஒரு முடிவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருக்கிறது. ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைப்பது இன்றுடன் முடிகிறது மீதி வீரர்களை ரிலீஸ் செய்துவிட்டு அந்த நான்கு பேர் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment