பத்து தல திரைப்படத்திலிருந்து வெளியான புதிய ஸ்டில்ஸ்.. சிம்பு, கௌதம் கார்த்தி எப்படி இருக்கிறார் பாருங்கள்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ  சிம்பு.  இவர் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து பெரிய வெற்றியை கண்டார். ஒரு கட்டத்தில் ஆக்சன் படங்களில் நடித்தார். முதலில்  வெற்றியை கொடுத்தாலும் போகப் போக இவருக்கு அது தோல்வியை கொடுத்தது.

ஆனால் அவருடைய மார்க்கெட் குறைந்ததோடு அதுமட்டுமில்லாமல் ஒரு கட்டத்தில் படங்களில் நடிக்காமல் உடல் எடை தாறுமாறாக ஏறியது. இதனால் சிம்புவின் சினிமா பயணம் கிளோஸ் என பலரும் நினைத்த நிலையில் திடீரென உடல் எடையை குறைத்து தனது எண்ணங்களை மாற்றி  ஈஸ்வரன் படத்தில் ஒரு புதிய லுக்கில் அவதாரம் கொடுத்தார்.

அதன் பிறகு சிம்பு நடிக்கும் ஒவ்வொரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வருகிறது கடைசியாக இவர் நடித்த  வெந்து தணிந்தது காடு ரசிகர்களின் ஃபேவரைட் படமாக மாறி உள்ளது. அதனைத் தொடர்ந்து சிம்பு  நடித்துவரும் திரைப்படம் பத்து தல..

இது மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி உள்ளது. படத்தில்  சிம்பு  வித்தியாசமான கெட்டப்பில்  நடித்து உள்ளார்.  அதுவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை உச்சத்தில் வைத்து உள்ளது. ஒரு வழியாக படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து படம் ரிலீஸை நோக்கி நகர்ந்து உள்ளது. பத்து தல படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து  கௌதம் கார்த்தி..

பிரியா பவானி சங்கர், அக்ஷயா ஷர்மா, கலையரசன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில்  பத்து தல படக்குழு படத்தின் ஹீரோ, வில்லன் லுக்கை வெளியிட்டுள்ளது. அதில் சிம்பு, கௌதம் கார்த்தியின் ஸ்டைல்  பார்ப்பதற்கு ஒவ்வொரு புகைப்படமும் செம்ம மாஸாக இருக்கிறது. இதோ நீங்களே பாருங்கள்..

pathu thala
pathu thala
simbu
simbu

Leave a Comment