மக்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சி முதல் சீசன் சமையல் தெரிந்த பிரபலங்களுடன் சமையல் தெரியாத காமெடி ஜாம்பவான்களை இறக்கி சற்று வித்யாசமாக நடத்தி மக்களிடையே பிரபலமானதை அடுத்து சீசன் சீசனாக நடத்தப்பட்டு வருகின்றன.
முதல் சீசனை அடுத்து 2-வது சீசன் பெரிதளவு பிரபலமடைந்தது. அதனால் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கிடந்தனர். அந்த வகையில் அண்மையில் சீசன் 3 நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று தேதி குறிப்பிடாமல் வெளியாகியது. இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களான ரோஷினி ஹரிப்ரியன்: இவர் பாரதிகண்ணம்மா தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தவர் மேலும் அண்மையில்தான் இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறி உள்ளார். கிரேஸ் கருணாஸ்: இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வந்தவர்.
அந்தோணிதாசன்: இவர் நாட்டுப்புற இசைக் கலைஞர் ஆவார் மேலும் சினிமா துறையில் பல்வேறு பாடல்களை பாடியவர் ஆவார். மனோபாலா: இவர் சினிமா உலகில் காமெடி நடிகர் ஆவார். மேலும் இவர் இயக்குனர், தயாரிப்பாளரும் ஆவார். சந்தோஷ் பிரதாப்: இவர் சார்பட்டா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் வித்யுலேகா: இவர் பிரபல நகைச்சுவை காமெடி நடிகை ஆவார்.
இதுபோன்று மேலும் சில பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதில் கோமாளியாக சிவாங்கி, மணிமேகலை, பாலா, மூக்குத்தி முருகன் போன்றோரும் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார்.
https://youtu.be/Dyb-mtIQjcI