கடலிலிருந்து பாய்ந்தபடி ஈட்டியை பிடித்தபடி ஜூனியர் என்டிஆர்.!வைரலாகும் RRR படத்தின் புதிய போஸ்டர்.!

தமிழ் திரைஉலகில் ஒரு திரைப்படத்தை இயக்கி நாளும் அந்த திரைப்படத்தை ரசிகர்களிடையே பலத்த வரவேற்ப்பை பெறவைக்கும் இயக்குனர் தான் சங்கர் இவர் எப்படியோ அதேபோல் தெலுங்கில் மிக மாஸ் காட்டி வரும் இயக்குனர் என்றால் அது ராஜமௌலி தான் தமிழில் ஷங்கர் எப்படி ஒரு திரைப்படத்தை இயக்கினால் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுப்பாரோ அதேபோல் தான் ராஜமௌலி அதிக பட்ஜெட்டில் கடந்த சில வருடங்களாக திரைப்படங்களை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் சுமார் 250 கோடிக்கு மேல் பட்ஜெட் செலவு செய்து அதனை மக்களிடையே வெற்றி காணவைத்தது மட்டுமல்லாமல் 1600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது.

மேலும் ராஜமௌலி தற்பொழுது தெலுங்கு சினிமாவின் மெகா பவர் ஸ்டார் என மக்களால் அழைக்கப்படும் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் போன்ற நடிகர்களை வைத்து சுமார் 350 கோடி பட்ஜெட்டில் இயக்கிவரும் திரைப்படம்தான் RRR இந்த திரைப்படம் சமீபத்தில் நடந்து முடிந்தது எனவும் ஆனால் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் இருக்கிறது என ஒரு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இந்த திரைப்படத்தில் பாலிவுட் பிரபலங்கள் அஜய் தேவ்கான், ஆலியா பட் போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் அதுமட்டுமல்லாமல் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை வைத்து தட்டி தழுவி எடுக்கப்பட்டு வரும் இந்த படம் எப்போது வெளியாகும் என பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 8 வெளியாக வேண்டியது ஆனால் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் படமாக எடுக்கப்பட வேண்டும் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போய் விட்டது மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தற்போது RRR படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் கதாப்பாத்திரம் இப்படித்தான் இருக்கும் என ஒரு போஸ்டரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

RRR
RRR

இதனை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் மிகவும் மாசாக இருக்கிறீர்கள் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு மிக ஆவலாக இருக்கிறது என கூறி வருவது மட்டுமல்லாமல் நீங்க இந்த திரைப்படத்தில் வேற லெவலில் நடித்து இருப்பீங்க போல என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment