கட்டுமஸ்தான உடல் பெரிய மீசை இணையதளத்தில் வெளியான அருண் விஜய்யின் ஹரி படத்தின் புதிய போஸ்டர்.!

வெள்ளித்திரையில் பல ஹிட்டடித்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தாலும் ஒரே கதை களம் கொண்டா பல திரைப்படங்களை எடுத்து ரசிகர்களுக்கு சலிப்பு தன்மையை கொடுத்ததால் தற்பொழுது எந்த திரைப்படமும் இயக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் தான் ஹரி.

இவரது இயக்கத்தில் வெளியான சிங்கம் 3 மற்றும் விக்ரமின் சாமி 2 படம் படுதோல்வியை சந்தித்தது ஏனென்றால் அதிலும் முதலாம் பாகம் இரண்டாம் பாகம் என எடுத்து ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெறாமல் இந்த திரைப்படங்கள் தோல்வியைத் தழுவியது.

அதுமட்டுமல்லாமல் ஹரி சூர்யாவுடன் மீண்டும் வருவார் திரைப்படத்தின் மூலம் கூட்டணி போட்டார் ஆனால் அது கைவிடப்பட்டது தற்போது அந்த படத்தின் கதையை தனது மச்சான் அருண் விஜய்யை வைத்து படம் எடுக்க உள்ளாராம் மேலும் 33ஆவது படம் என்றுகூட கூறலாம் வேல் படத்தை போலவே இந்த திரைப்படமும் குடும்ப கதை களம் கொண்டு எடுக்கப்படும் திரைப்படம் ஆகும் என சினிமா வாசிகள் கூறுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் அருண் விஜய் படத்தில் மாஸான ஸ்டைலில் வலம் வருவார் என்பது தெரிந்தது தான் ஆனால் அருண் விஜய்க்கு இந்த திரைப்படத்தில் ஹரி புதிதாக ஒரு கெட்டப்பை வைத்துள்ளாராம் ஆம் இந்தத் திரைப்படத்திற்காக அருண்விஜய் சந்தன கடத்தல் வீரப்பன் போல் கிடா மீசையுடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது அதற்கேற்ற மாதிரி ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

arun vijay
arun vijay

மேலும் இந்தத் திரைப்படத்திற்காக ஹரியுடன் 12 வருடம் கழித்து மீண்டும் ஜிவி பிரகாஷ் கூட்டணி வைத்துள்ளாராம்.

Leave a Comment