நடிகர் மனோபாலாவின் இறுதி சடங்கு.! கண்ணீர் மல்க விடை கொடுத்த சொந்தங்கள்..

0
manobala
manobala

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக இருந்து பல திரைப்படங்களில் இயக்குனராகவும் பணியாற்றி கடந்த சில வருடங்களாக காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து நேற்று மறைந்த நடிகர் தான் மனோபாலா. இவர் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகர் அந்த அளவிற்கு இவர் பல திரைப்படங்களை இயக்கியும்,தயாரித்தும் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

மேலும் இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார் இந்நிலையில் கடந்த சில நாட்களாக மிகவும் உடல்நிலை மோசமான நிலையில் நேற்று இவர் மறைந்த செய்தியை கேட்ட பல பிரபலங்களும் நேரில் வந்து இவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்கள். அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பார்த்திருக்கலாம்.

இன்று இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்ற புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு வளசரவாக்கம் மின் மயானத்திற்கு சென்றுள்ளதாம் அங்கு அவரது உடலுக்கு குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டதாம்.

இறுதி சடங்குகளை நடிகர் மனோபாலாவின் மகன் செய்துள்ளார் மேலும் அங்கிருந்த குடும்பத்தினர்,நண்பர்கள்,சினிமா பிரபலங்கள் அனைவரும் மரியாதை செலுத்தி நடிகர் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

manobala
manobala

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் கண்ணீர் மல்க எங்களை விட்டு நீங்கள் பிரிந்தது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது நீங்கள் நீண்ட காலங்கள் நிறைய திரைப்படங்களில் நடிப்பீர்கள் என்று நினைத்தோம் ஆனால் இப்படி ஆகும் என்பது யாருக்கும் தெரியவில்லை என்று ரசிகர்கள் பலரும் கண்ணீர் மல்க கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

manobala
manobala