“வலிமை” படத்தின் எடிட்டர் பகிர்ந்த புதிய செய்தி.! இணைய தளத்தில் வேகம் எடுக்கும் புகைப்படம்.

அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் ஹச். வினோத் பிரமாண்ட இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை இந்த திரைப்படம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பைக் மற்றும் போலீஸ் சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது வலிமை படத்தில் இவர்களைத் தொடர்ந்து ஒளிப்பதிவு நீரவ்ஷா, இசையில் யுவன் சங்கர் ராஜா போன்றவர்கள் பணியாற்றி உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மென்மேலும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

மேலும் வலிமை படத்தில் அஜித்துடன் கைகோர்த்து ஹீமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு மற்றும் மூன்று மலையாள பிரபலங்கள் என தொடர்ந்து அடுத்தடுத்து பலர் நடித்துள்ளனர். வலிமை படத்தில் இருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், glimpse வீடியோ, வேற மாதிரி பாடல் ஆகியவை தொடர்ந்து இந்த படத்தில் இருந்து அடுத்த அடுத்த அப்டேட்களை வெளியிட்டது படக்குழு.

ஒருபக்கம் முனைப்பு காட்டி வருகிறது. மறுபக்கம் போஸ்ட் பிரமோஷன் வேலைகளை தீவிரமாக செய்து படத்தை தமிழில் தாண்டி மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிட ரெடியாக இருக்கிறது இந்த நிலையில் வலிமை படத்தின் டிரைலர் தற்போது எடிட் செய்யப்பட்டு வருவதாக படத்தின் எடிட்டர் விஜய் வேலு குட்டி தெரிவித்துள்ளார்.

வேலை செய்து கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் இதை அறிந்த ரசிகர்கள் தற்போது சந்தோஷத்தில் இருக்கின்றனர் மேலும் டிரைலரை எதிர்நோக்கி இருக்கின்றனர் ரசிகர்கள்.

valimai
valimai

Leave a Comment