லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளி வருகிறது. தமிழில் இவரது காதலன் இயக்கிய காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து OTT தளத்தில் வெளியாகும் என தெரிய வருகிறது.
இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே நயன்தாராவுக்கு அடுத்தடுத்த சிறப்பான செய்தி வந்துகொண்டே இருக்கின்றன. இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் பல பிரம்மாண்ட செயல்களை செய்து அசத்தியுள்ளார் ஆம் வண்ண வண்ண வெடிகளை வெடிக்கச் செய்து நயன்தாராவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மேலும் நயன்தாரா என்ற பெயரில் எழுதி பெயர் எழுதிய ஒரு பிரம்மாண்ட கேக்கை நயன்தாராவை . வைத்து அழகு பார்த்து உள்ளார் விக்னேஷ் சிவன் மேலும் பல வித அடுத்தடுத்த சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்க நயன்தாரா கமிட்டாகியுள்ளார்.
தெலுங்கில் கோல்ட், ஃபாதர் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். முதல் முறையாக ஷாருக்கானுடன் கைகொடுத்து லயன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இது இப்படி இருக்க தமிழில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தை தொடர்ந்து இவர் கனெக்ட் என்ற ஒரு திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது படத்தின் போஸ்டரை பார்க்கும்போது தெரிகிறது இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு திரில்லர் படமாக இருக்கும் என்று இந்த திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் பல ஜாம்பவான்கள் நடிக்க உள்ளனர்.

இந்த திரைப்படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கவுளளார். இதற்கு முன்பாக நயன்தாராவை வைத்து மாயா என்ற படத்தை எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இவர் இந்த படத்தை இயக்க விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளார்.