ஹெல்மெட், லைசென்ஸ் இல்லாமல் வந்த இளைஞருக்கு 23,000 ரூபாய் அபராதம்.! குமுறும் பொதுமக்கள்.!

0
police
police

மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி போக்குவரத்து விதி மீறல்களுக்கு முன்பிருந்த அபராதத் தொகையை விட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது, இந்த சட்டம் நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் சாலை விபத்துகளை தடுக்க, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் உள்ள குருகிராம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஹெல்மெட் இல்லாமலும் லைசென்ஸ் இல்லாமலும் இளைஞர் வண்டியில் வந்துள்ளார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள், அவரிடம் வண்டியின் ஆவணங்கள் மற்றும் லைசன்ஸ் எதுவும் இல்லாததால் ஒவ்வொன்றுக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராத தொகை விதித்தார்கள். அவருக்கு 23 ஆயிரம் ரூபாய் செல்லானை வழங்கினார்கள்.

அவர்கள் விதித்த அபராதத் தொகை படி லைசன்ஸ் இல்லாததற்கு 5000 ரூபாயும் ஆர்சி புக் இல்லாததற்கு 2,000 ரூபாயும், இன்சூரன்ஸ் இல்லாததற்கு 2,000 ரூபாயும் ஹெல்மெட் அணியாதற்கு ஆயிரம் ரூபாயும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்று இல்லாததற்கு பத்தாயிரம் ரூபாயும் ஆக மொத்தம் 23 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

இதுபோன்ற கடுமையான சட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளார்கள், அவசரமாக எங்கே செல்லும் போது ஹெல்மெட் அணியாமல் செல்லும் நிலை ஏற்பட்டாலும் அபராதம் விதிக்கிறார்கள், குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்க மல் மக்களிடம் அபராதத் தொகையை வருவாயை அதிகரித்து கொள்கிறார்கள். ஏற்கனவே விலைவாசி ஏறி உள்ள இந்த நிலையில் இப்படி அதிகமாக அபராதம் முறை இருப்பதால் பொது மக்கள் குமுறுகிறார்கள்.