ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இருந்து வெளியான புதிய தகவல்.? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து அவர் தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் கர்ணன் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் தனுஷ் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து போன்ற பாடல்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

அதுமட்டுமல்லாமல் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று தற்போது வரை யூடியூபில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது இதனைத்தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இருந்து தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் இந்த திரைப்படத்தின் ஆடியோ ஜூன் 7-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பலரும் தனுஷின் அடுத்த திரைப்படங்கள் எப்பொழுது வெளியாகும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

dhanush9
dhanush9

தனுஷ் ஜகமே தந்திரம் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் இவர் நடித்து வரும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர் பார்ப்பது மட்டுமல்லாமல் தனுஷின் புதிய திரைப்படங்களில் இருந்து புதிதாக அப்டேட் வெளிவந்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment