தனுஷ் நடிக்கும் தி கிரே மேன் படத்தில் இருந்து வெளியான புதிய தகவல்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

தனது நடிப்பு திறமையை காட்டி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருபவர் தான் நடிகர் தனுஷ் இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக கடந்த சில வருடங்களாகவே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் பல விருதுகளைப்  பெற்று இவருக்கு புகழைத் சேர்த்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

தனுஷ் நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது ஆம் இவரது நடிப்பில் கூடிய சீக்கிரம் வெளியாக உள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம் இந்த திரைப்படம் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் யூடியூபில் தற்பொழுது வரை அதிகப் பார்வையாளர்களைப் பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என இவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது என சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

இதனைத்தொடர்ந்து அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய இயக்குனருடன் தி கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தற்போது இந்த திரைப்படத்தை பற்றி தான் ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு தனுஷ் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றார்.

dhanush2
dhanush2

ஒரு மாதம் அங்கு சண்டை பயிற்சி எடுத்துக் கொண்டு பின்பு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் மேலும் பல மாதங்களாக நடந்து வந்த இந்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது எனவும் கூடிய சீக்கிரம் தனுஷ் சென்னை திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவலை அறிந்த தனுஷ் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை பார்க்க மிக ஆவலுடன் இருக்கிறோம் இது எப்போது வெளியாகும் எங்களுக்கு சொல்லுங்கள் என சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment