டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு.! அதுவும் எந்த விஷயத்திற்காக தெரியுமா.?

சின்னத்திரையில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அதனைத் தொடர்ந்து கதாநாயகனாக பல திரைப்படங்களில் தற்பொழுது நடித்துவரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதனை தொடர்ந்து தான் இவர் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.

அவ்வாறு இவர் கதாநாயகனாக நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.மேலும் இவரது திரைப்பயணத்தில் நிறைய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு கொடுத்தாலும் இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்துவிட்டது.

கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை பெற்றுவிட்டது. மேலும் இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகும் நிலையில் தற்போது டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டப்பட்டு இந்த திரைப்படத்தை எடுத்துள்ளார்கள் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு உண்மையாகவே இந்த திரைப்படம் கை கொடுத்து விட்டது இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்கள் பலரும் கொண்டாடினார்கள் என்று கமெண்ட் பதிவு செய்தும் வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து பார்த்தால் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் மாவீரன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என கூறியதால் ரசிகர்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Leave a Comment