மீண்டும் வசூலில் அதிரடி காட்டும் பொன்னியின் செல்வன் 2.? அதுவும் இந்த அளவுக்கா..

கடந்த மாதம் பல திரையரங்குகளில் வெளியாகி தற்பொழுது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் என்று தான் கூற வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களுமே தங்களது அடுத்த அடுத்த திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார்கள்.

இந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இந்தத் திரைப்படமும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்யும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது படம் வெளியான முதல் நாளிலிருந்து ஒரு சில நாட்கள் நன்றாக வசூல் செய்து வந்த நிலையில்.

கடந்த இரண்டாம் தேதியில் இருந்து இந்த திரைப்படத்தின் வசூல் மிகவும் குறைந்து கொண்டே போனதாகவும் ஒரு தகவல் வெளியானது.அதனைத் தொடர்ந்து தற்பொழுது வரை இந்த திரைப்படத்தின் வசூல் எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது.

ஆம் இந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தற்பொழுது வரை உலக அளவில் ரூ.255 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.அதேபோல் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.93 கோடி வரை வசூல் செய்து இந்த இரண்டாம் பாகம் சாதனை படைத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ps2
ps2

மேலும் இந்த வாரம் இறுதியில் படம் கிட்டத்தட்ட 300 கோடியை தொட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது அதன்படி பார்த்தால் இந்த திரைப்படத்தின் வசூல் ரூ.300 கோடியை தொட்டுவிட்டால் சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிடும் என பல ரசிகர்களும் தங்களது கருத்துக்களை கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment