தனது திரைப்பயணத்திலேயே நானும் ரவுடிதான் திரைப்படத்தில் முதன் முதலாக இந்த விஷயத்தை செய்த நயன்தாரா.?

0

ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் நயன்தாரா இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பே பல மொழித் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானலும் தமிழ் ரசிகர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வலம் வந்தார்

இவர் பல திரைப்படங்களில் தனது முழுமையான நடிப்பை காட்டி வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைக் கொடுத்தார்கள் அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களுக்கு சமமாக ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகை என்று கூட இவரை சொல்லலாம் அந்த அளவிற்கு இவர் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.

மேலும் இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அந்த வகையில் இவர் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் ஏனென்றால் இந்த திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து பல நடிகைகள் நடித்ததால் நயன்தாராவின் நடிப்பு எப்படி இருக்கும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது.

இந்நிலையில் நயன்தாராவின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களில் ஒன்று தான் நானும் ரவுடி தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பு மக்களால் பாராட்டப்பட்டது இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நயன்தாரா புதிதாக ஒரு விஷயத்தை செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

nayanthara0
nayanthara0

அதாவது இந்த திரைப்படத்தில் தான் நயன்தாரா முதன் முதலாக தனது சொந்த டப்பிங் பேசியுள்ளாராம் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் தான் இந்த விஷயத்தை செய்தாரா என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.