குட்டி பவானிக்கு குரு உச்சத்தில் இருக்கிறார் போல எந்த ஹீரோவுக்கு வில்லனாகிறார் பார்த்தீர்களா.!

0

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து பின்பு சிறிய சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி தற்பொழுது மிகப் பெரிய நடிகராக வலம் வருபவர்  மகேந்திரன் இவர் குழந்தை நட்சத்திரமாக நிறைய திரைப்படங்களில் பணியாற்றி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்று விலங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும் அதிலிருந்து இவரை மாஸ்டர் மகேந்திரன் என்றுதான் ரசிகர்கள் பலரும் அழைத்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் என ஒரு தகவல் கிடைத்துள்ளது ஆம் இவர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் டி 43 என்ற பெயரிடாத திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என ஒரு தகவல் கசிந்துள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கும் இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன் தனுஷிற்கு ஜோடியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மகேந்திரன் இந்த திரைப்படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த மகேந்திரன் மறுபடியும் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும்.

mahendiran
mahendiran

அதுமட்டுமல்லாமல் தனுஷிற்கு இவர் வில்லனாக நடித்தால் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விடுவார் என கூறி வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் தனுஷுடன் இவர் இணைந்து நடித்தால் மிகப் பெரிய நடிகராக மட்டுமல்லாமல் இவரும் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது என கூறிவருகிறார்கள்.