இப்படித்தான் இருக்குமா ஜெயிலர் படத்தின் கதை.? அட இது தெரியாம போச்சே..

0
rajini
rajini

தமிழ் திரை உலகில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். மேலும் இவரது நடிப்பில் தற்பொழுது ஜெயிலர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது ஆம். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் மோகன்லால்,சிவராஜ்குமார்,தமன்னா,ரம்யா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருவதால் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து இருக்கும். அந்த வகையில் பார்த்தால் ஜெயிலர் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது என பல பிரபலங்களும் கூறி வருகிறார்கள்.

ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் கதை இப்படிதான் இருக்கப் போகிறது என ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது ஜெயிலர் படத்தின் போஸ்டர் மற்றும் இரண்டு கிலிம்ப்ஸ் வீடியோக்களிலும் நடிகர் ரஜினி ஒரே கலர் சட்டை அணிந்துள்ளதால்.

இந்த திரைப்படம் ஒரே நாளில் எடுக்கப்பட்ட படமாக தான் இருக்கப்போகிறது எனவும் தகவல் வெளியாகி உள்ளது மேலும் இந்த திரைப்படம் ஒரே நாளில் நடக்கப்பட்ட கதையாக இருந்தால் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெருமா என்றும் ஒரு சில ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

மேலும் இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பல ரசிகர்களும் ஒரே நாளில் எடுக்கப்பட்ட கதையாக இருந்தால் ரஜினி மிகவும் அற்புதமாக நடித்திருப்பார். ஆனால் அப்படி இயக்குனர் நெல்சன் வைத்திருக்க மாட்டார் என்பது மட்டும் எங்களுக்கு தெரியும் என்றும் ஒரு சில ரசிகர்கள் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

rajini
rajini