மறைவிற்குப் பின்பும் சித்ராவை அசிங்கப்படுத்தும் மர்ம நபர்.! கொதித்தெழுந்த ரசிகர்.

vj-chithra
vj-chithra

சின்னத்திரையில் ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வந்தவர் தான் சீரியல் நடிகை சித்ரா இவர் சின்னத்திரையை விட்டு மறைந்த விஷயம் தற்போது வரை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இவரது பிறந்த நாளிற்கு கூட இவரது தாய்,தந்தை இவரது புகைப்படத்தை வைத்து கேக் வெட்டி கொண்டாடினார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் அந்த வகையில் பார்த்தால் இவர் மறைந்த பின்பும் இவருக்கு பல விருதுகளை வழங்கினார்கள்.

மேலும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் இவர் நடித்து வந்த முல்லை கதாபாத்திரத்தில் தற்போது வேறு ஒரு நடிகை நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் எதற்காக தன்னைத் தானே இப்படி செய்து கொண்டார் என்பது தற்போது வரை தெரியவில்லை இருந்தாலும் சித்ராவை பற்றி பலவிதமான தகவல்கள் சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களுக்கு வெளிவந்து கொண்டே இருக்கிறது.

chithra
chithra

ஒரு சில ரசிகர்கள் சித்ரா இப்படிப்பட்டவரா என பலவிதமான கேள்விகளை எழுப்புவது மட்டுமல்லாமல் சித்ரா மறைந்ததை எங்களால் தற்பொழுது வரை மறக்க முடியவில்லை இப்படி இருக்கும் நிலையில் தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ஒரு பக்கம் ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

chithra2
chithra2

மேலும் சித்ராவின் மரணத்தை வைத்து பலரும் வியாபாரம் செய்து வந்தார்கள் என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக சித்ரா ஆவியிடம் பேசுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய பரபரப்பை கிளப்பியது இந்நிலையில் சித்ராவைப் பற்றி வெளிவந்த வீடியோக்களுக்கு சித்ராவின் ரசிகர் ஒருவர் மிகவும் எதிர்ப்பான கமெண்ட் பதிவு செய்துள்ள விஷயம்தான் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.