அவன் இவன் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர்களா.? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே..

0
jeeva
jeeva

தமிழ் திரை உலகில் நிறைய ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் பாலா அவர்கள் இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை அந்த அளவிற்கு இவர் தனது திரைப்படத்தில் சோகமான காட்சிகளில் பல பிரபலங்களையும் நடிக்க வைத்துள்ளார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அவன் இவன் இந்த திரைப்படத்தில் விஷால் அண்ணனாகவும் ஆர்யா தம்பியாகவும் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கூட கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். இந்நிலையில் விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவர்களும் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் வேறு ஒரு நடிகர்கள் தான் நடிக்க இருந்தது என தற்பொழுது ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது அவன் இவன் திரைப்படத்தில் முதலில் நடிகர் ஜீவா மற்றும் அவரது அண்ணன் ஜித்தன் ரமேஷ் ஆகியவர்கள் தான் நடிக்க இருந்தார்களாம். ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து இவர்கள் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இயக்குனர் பாலா என்றாலே நடிகர்கள்,நடிகைகள் எல்லாம் பயந்து விடுவார்கள்.

அவரது திரைப்படத்தில் நடிப்பது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை விஷால் மற்றும் ஆர்யா நடித்த கதாபாத்திரத்தில் இவர்களும் நடித்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும் என்றும் ஒரு சில ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.மேலும் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது குறிப்பாக அவன் இவன் திரைப்படத்தை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

jeeva
jeeva