காதலில் விழுந்த அஞ்சலிக்கு மாப்பிள்ளை இந்த விதம் தானாம்.? ஜெய் இல்லையாம் இணையத்தில் வெளியான புதிய தகவல்.?

வெள்ளித்திரையில் நிறைய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தற்போது பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர்தான் அஞ்சலி இவர் தமிழில் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கினார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

அந்த வகையில் பார்த்தால் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன் பின்பு கலகலப்பு,எங்கேயும் எப்போதும்,அங்காடி தெரு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வெற்றி பெற்றதால் பின்பு கன்னடம்,மலையாளம்,தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டார்.

மேலும் அஞ்சலி நடிப்பில் தற்போது தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களும் தமிழில் ஒரு சில திரைப்படங்களும் உருவாகி வருகிறது 34 வயதான நடிகை அஞ்சலி ஒரு சில காலங்களுக்கு முன்பு நடிகர் ஜெய் உடன் காதலித்து வருவதாகவும் ஒரு தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் இதுபற்றி அஞ்சலி ஒரு பேட்டியில் நான் காதலித்தது உண்மைதான் அது நிறைவேறவில்லை எனவும் முடிந்து விட்டது எனவும் கூறினாராம்.அவர் அப்பொழுது காதலித்தவர் பெயரையும் ரசிகர்கள் மத்தியில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஞ்சலி பற்றி புதிதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது அதாவது அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும் கூடிய சீக்கிரத்தில் அவர் திருமணம் ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது ஆனால் அஞ்சலிக்கு பார்த்த மாப்பிள்ளை இரு விதமாக இருக்கலாம் எனவும் செய்திகள் வந்துள்ளது.

anjali2

அதாவது அஞ்சலிக்கு பார்த்த மாப்பிள்ளை தெலுங்கு நடிகராக இருக்கலாம் அல்லது வீட்டில் பார்க்கும் தொழிலதிபராக இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.அஞ்சலி திருமணம் செய்துவிட்டால் உடனே சினிமாவில் நடிப்பதையும் விட்டு விடுவாராம் இதனைத்தொடர்ந்து அஞ்சலி இந்த தகவலை உறுதிப்படுத்துவாரா என்பது தான் தெரியவில்லை.

Leave a Comment

Exit mobile version