எனக்கும் விஜய் சேதுபதிக்கும் பத்து வயது தான் வித்தியாசம் என்னால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவே முடியாது என பட வாய்ப்பை நழுவவிட்ட பிரபல நடிகை.?

கடந்த சில வருடங்களாக நிறைய ஹிட்டடிக்கும் திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இவர் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் எல்லா திரைப்படங்களும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருவதால் இவரை வைத்து திரைப்படங்கள் இயக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

விஜய் சேதுபதி மட்டும் என் கதைக்கு ஓகே சொன்னால் போதும் படம் வேற லெவலில் ஹிட்டாகும் என பல இயக்குனர்கள் விஜய்சேதுபதியை சுற்றி வருகிறார்கள் ஆனால் விஜய் சேதுபதி நடிப்பில் தற்பொழுது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்,தெலுங்கு என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வசூலை அல்லி கொண்டே இருக்கிறது இவரது திரைப்படங்கள் என்றுதான் கூறவேண்டும் மேலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பதற்கு எந்த கதாபாத்திரம் இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்கள் என பல நடிகர்கள்,நடிகைகள் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆசைப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது அந்த தகவல் என்னவென்றால் விஜய் சேதுபதியுடன் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு பிரபல நடிகை மீரா கிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது இவர் ஏற்கனவே வசூல்ராஜா எம்பிபிஎஸ்,அரண்மனை,வேதாளம்,வசீகரா போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருக்கு விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என இவரும் வாய்ப்பு தேடி வந்தாராம் அதற்கு ஏற்ற மாதிரி இவருக்கு விஜய் சேதுபதி திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரம் கிடைத்துள்ளதாம்.

meera
meera

இந்த தகவலை அறிந்த இவர் எனக்கும் விஜய் சேதுபதிக்கும் பத்து வயசுதான் வித்தியாசம் என்னைப் போய் அவருக்கு அம்மாவாக நடிக்க சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று அந்த கதாபாத்திரத்தை நழுவ விட்டு விட்டாராம் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நீங்கள் அம்மாவாக நடிக்க வேண்டாம் கதாநாயகியாக நடிக்கிறீர்களா என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment