ஹாலிவுட் லெவலுக்கு இறங்கி அடிக்க போகும் வெற்றிமாறன்.? யாரை சந்திக்க போகிறார் தெரியுமா.?

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அதிலும் குறிப்பாக நடிகர் தனுஷை வைத்து இயக்கிய அனைத்து திரைப்படங்களுமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விட்டது என்றும் கூறலாம் மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரி தனது நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அதிலும் குறிப்பாக காமெடி நடிகரை எப்படி கதாநாயகனாக மாற்ற வேண்டும் என்று இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் முடிவு செய்து நடிகர் சூரி அவர்களை அட்டகாசமாக நடிக்க வைத்திருப்பார்.

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் இவரது இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக எடுக்க பட்ட நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த அடுத்த திரைப்படங்களை இயக்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் வெற்றிமாறன் அவர்கள் லண்டன் சென்றுள்ளாராம் எதற்காக என்று கேட்டால் வாடிவாசல் படத்திற்காக ஜல்லிக்கட்டு காட்சிகளை VFX தொழில்நுட்பவாதிகளை சந்திக்க சென்றுள்ளார் என புகைப்படத்துடன் ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vetrimaran
vetrimaran

மேலும் நடிகர் வெற்றிமாறன் அதற்காக தான் சென்றாரா இல்லை தனது சொந்த விஷயத்திற்காக சென்றாரா என்பது தெரியவில்லை என்றாலும் பல ரசிகர்களும் வாடிவாசல் திரைப்படத்திற்காக தான் இயக்குனர் வெற்றிமாறன் சென்றுள்ளார் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment