குட் நைட் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா.? அட பரவாயில்லையே..

தமிழ் திரையுலகில் பல திறமைகளைக் கொண்டு வலம் வரும் நடிகர்களில் ஒருவர்தான் மணிகண்டன் இவர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் என்றும் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவருக்கும் மிகவும் பிடித்து விட்டது என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து இவருக்கு நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இப்படி இருக்கும் நிலைமையில்.

தற்பொழுது இவரது நடிப்பில் சந்திரசேகர் இயக்கத்தில் குட் நைட் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.குட் நைட் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளதால் இவரது நடிப்பு மிகவும் இயல்பாக இருக்கிறது.

என்றும் ஒரு சில பிரபலங்கள் கூறி வரும் நிலையில். தற்போது இந்த திரைப்படத்தின் வசூல் எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதன்படி இந்த திரைப்படம் இரண்டு நாளில் ரூ.1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பலரும் இதுதான் உண்மை என்றும் கூறி வரும் நிலைமையில் தற்போது நடிகர் மணிகண்டன் அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார்  எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது பற்றி எங்களுக்கு தெரிந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

manikandan
manikandan

Leave a Comment