பழம்பெரும் நடிகர் சுருளிராஜன் இப்படிதான் இறந்தாரா.? இவருக்கா இந்த நிலைமை.!

எம்ஜிஆர்,சிவாஜி காலத்திலேயே அவர்களுடன் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து தனக்கென ஒரு இடத்தை அந்த காலத்திலேயே நிரந்தரமாக பிடித்த காமெடி நடிகர் தான் சுருளிராஜன் இவர் எம்ஜிஆர்,சிவாஜி காலத்தில் ஒரு நாளைக்கு 50ஆயிரம் வரை சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வந்துள்ளார்.

அதற்கு முக்கிய காரணம் இவர் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் தனது இயல்பான நடிப்பை காட்டுவது மட்டுமல்லாமல் வித்தியாசமான நகைச்சுவை காமெடிகளை செய்து காட்டி அப்பொழுது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக்கொண்டார்.

சினிமாவையும் தாண்டி இவர் பத்திரிக்கையாளர்களிடம் மிகவும் நெருக்கமாக பழகி வரும் நபர் என்று கூட கூறலாம் ஆம் இவர் பத்திரிக்கையாளர்களிடம் மிகவும் நெருக்கமாக பழகுவாராம்.பத்திரிக்கையாளர்கள் இவரை சந்திக்க வந்தால் உடனே அவர்களுக்கு மதுபானம் கொடுத்து மகிழ்வித்து விடுவாராம் அந்த அளவிற்கு இவர் பத்திரிக்கையாளர்களிடம் நண்பனாக பழகி வந்துள்ளார்.

மேலும் இவர் ஒரே நேரத்தில் 7 படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் ஒரு இயக்குனருக்கு 3மணி நேரம் மட்டுமே கால்ஷீட் தருவாராம் ஏனென்றால் அப்போது நிறைய திரைப்படங்களை இவர் கைப்பற்றி நடித்து வந்தாராம் நன்றாக தமிழ் திரையுலகில் வலம் வந்த இவர் யாரோ ஒருவர் கூறியதை வைத்து இளநீரில் ஜின் மதுபானத்தை கலந்து குடித்துள்ளார்.

suruli rajan
suruli rajan

இதனால் அவரது கல்லீரல் மிகவும் பாதிப்படைந்து ஒரு கட்டத்தில் இவர் உயிர் பிழைக்க மிகவும் சிரமப்பட்டார் ஆனால் எம்ஜிஆர் கூட இவருக்கு உதவி செய்யும் வகையில் விமானத்தின் மூலம் எல்லாம் மருந்துகளை வர வைக்க உத்தரவிட்டுள்ளார்.ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment