ரஜினிக்கு சகோதரியாகவும்,அம்மாவாகவும்,மாமியாராகவும் நடித்துள்ள ஒரே நடிகை இவர்தான்.!

தற்பொழுது உள்ள நடிகர்கள் திரைப்படங்களில் நடிப்பதில் போட்டி போட்டு வந்தாலும் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகராக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது சினிமா பயணத்தில் நடக்காத சோகங்களே இல்லை என்ற அளவிற்கு கூட சொல்லலாம்.

அந்த வகையில் பார்த்தால் இவர் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் நடிக்கும்போது இவருக்கு பல பிரச்சினைகள் வந்துள்ளது அதையெல்லாம் தாண்டி இவர் தமிழில் நிரந்தரமான நடிகராக நிறைய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

மேலும் இவரது நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலில் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது அதனைத் தொடர்ந்து இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து மீனா,குஷ்பூ,கீர்த்தி சுரேஷ், நயன்தாரா போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பரிச்சயமான நடிகைகள் நடித்துள்ளார்கள்.அதுமட்டுமல்லாமல் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என பலரும் சமூக வலைதள பக்கங்களில் கேட்டு வரும் நிலையில் ரஜினி எந்த இயக்குனரை தேர்வு செய்வார் என்பது தெரியவில்லை இந்தநிலையில் ரஜினியுடன் ஒரு நடிகை பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

srividya
srividya

யார் அந்த நடிகை என்று கேட்டால் வேறு யாருமில்லை தமிழில் அந்தக் காலத்திலேயே நிறைய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்த ஸ்ரீவித்யா தான் இவர் ரஜினிக்கு அம்மா,மாமியார்,சகோதரி என பல கதாபாத்திரங்களிலும் நடித்த ஒரே நடிகை இவர்தான் என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு இவரது நடிப்பு மிகவும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த தளபதி,மாப்பிள்ளை போன்ற பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பொழுது வசூலில் அதிகம் வசூல் செய்துவிட்டது.

Leave a Comment