ராஷ்மிகா மந்தனாவை பார்த்து ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீங்க என கேட்ட ரசிகர்.? அதற்கு அவர் என்ன பதில் அளித்துள்ளார் பாருங்க.

0

தெலுங்கு திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா இவர் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் தெலுங்கு திரைப்படங்களில் இவர் என்னதான் நிறைய திரைப்படங்கள் தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் இவருக்கு கீத கோவிந்தம் என்ற திரைப்படம் மட்டுமே கை கொடுத்தது.

இந்த திரைப்படத்தில் நடித்து தமிழ்நாட்டு ரசிகர்களையும் அதிகமாக கவர்ந்து விட்டார் தமிழில் மற்ற நடிகைகளைப் போல் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவரும் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

இவருக்கு சுல்தான் திரைப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழில் இவர் அடுத்ததாக நடிக்கப்போகும் திரைப்படங்களை பற்றி ஒரு ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்காக மிக ஆவலாக இருக்கிறார்கள் இவர் தமிழில் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் அது மட்டுமல்லாமல் மற்ற நடிகைகளைப் போல் இவரும் ரசிகர்களிடம் கேள்வி கேட்கச் சொல்லி நான் பதிலளிக்கிறேன் என்ற விளையாட்டை விளையாடி உள்ளார் அதேபோல் இவர் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டே வந்த பொழுதே திடீரென ஒரு ரசிகர் நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளாராம்.

rashmika2
rashmika2

அதற்கு கொஞ்சம் கூட தாமதம் செய்யாமல் ராஷ்மிகா மந்தனா எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லை அதேபோல் சிகரெட் பிடிப்பவர்களை பார்த்தாலே அவர்களிடம் நான் ஒதுங்கி தான் இருப்பேன் என கூறிவிட்டாராம்.மேலும் இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.