ரஜினி நடித்து தோல்வியடைந்த பாபா படத்திற்கு பார்ட்டி வைத்து கும்மாளம் அடித்த நடிகர்கள்.?

ரஜினி நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ஆனால் இவர் நடித்து ஒரு சில திரைப்படங்கள் தோல்வி அடைந்ததும் உண்டு அந்த வகையில் பார்த்தால் தோல்வியடைந்த திரைப்படங்களை ரஜினி திரும்பிக்கூட பார்க்காமல் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து தனது ரசிகர்களுக்கு தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் ரஜினி நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் எல்லா திரைப்படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறுவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பல கோடி வசூல் செய்து விடுகின்றது.அதற்கு முக்கிய காரணம் ரஜினி தனது ரசிகர்களுக்கு நல்ல நல்ல திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல நடிகைகள் நடித்திருக்கிறார்கள் இந்நிலையில் ரஜினியின் திரைப்பயணத்தில் தோல்வியடைந்த திரைப்படங்களில் ஒன்று தான் பாபா இந்த திரைப்படம் சொந்தகதை சொந்த தயாரிப்பு என ரஜினி இந்த திரைப்படத்தில் ஆர்வமாக நடித்ததால் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே தோல்வி அடைந்து விட்டது.

தொலைக்காட்சியில் பார்க்கும் போது எதற்காக இந்த திரைப்படம் தோல்வி அடைந்தது என பலரும் கேட்கலாம் எல்லா காட்சிகளும் இந்த திரைப்படத்தில் ஒழுங்காக தான் காட்டப்பட்டிருக்கும் இருந்தாலும் மக்களிடையே படம் தோல்வியை சந்தித்து விட்டது வசூல் ரீதியாகவும் சொதப்பி விட்டது என்று தான் கூற வேண்டும்.

தமிழ் திரையுலகில் தற்போது உள்ள பல நடிகர்களும் ஒரு திரைப்படத்தில் நடித்து தோல்வி அடைந்தால் அடுத்த திரைப்படங்களில் நடித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம் ஆனால் ரஜினி பாபா திரைப்படத்தில் அதிகமான நஷ்டம் என்பதால் தனது சொந்த செலவில் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு  ஈடுகட்டினாராம்.

இது ஒரு பக்கம் இருக்க ரஜினியின் பாபா திரைப்படம் தோல்வி அடைந்ததை கேட்டா தமிழ் சினிமாவில் உள்ள ஒரு சில நடிகர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடினார்களாம்.ஏனென்றால் ரஜினியின் திரைப்பயணத்தில் இனிமேல் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டார் எனவும் இனிமேல் அந்த இடத்திற்கு நானும்,நீயும் தான் என பார்ட்டி வைத்து கொண்டாடினார்களாம்.

rajini7
rajini7

இதனையடுத்து இந்த தகவல் தற்பொழுது ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் யார் இப்படி செய்தார்கள் என ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment