இந்த கதாபாத்திரத்தில் நான் தான் முதல் முதலாக நடிக்கிறேன்.! உற்சாகத்தில் தளபதி 65 பட நடிகை.!

பொதுவாகவே தமிழில் ஒரு நடிகை பிரபலமான நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டுமென்றால் அந்த நடிகைக்கு பல திறமைகள் இருந்தால் தான் நடிக்க முடியும் என்பது நமக்கு தெரிந்தது தான் அந்த வகையில் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி விட்டு பின்பு நல்ல வரவேற்பு கிடைக்காமல் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் நடிக்க சென்ற நடிகை தான் பூஜா ஹெக்டே.

இவர் முகமூடி திரைப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு மற்றும் இந்தி சினிமா பக்கம் சென்றுவிட்டார் அதனைத் தொடர்ந்து இவருக்கு இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அங்கு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தையும் நிரந்தரமாக பிடித்துவிட்டார் பூஜா ஹெக்டே.

மேலும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக தற்பொழுது தளபதி 65 திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஆம் பூஜா ஹெக்டே இந்த திரைப்படத்தில் நிறைய காட்சிகளில் நடித்து வருகிறாராம்.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது பொதுவாக விஜயுடன் நடிக்கும் நடிகைகளுக்கு அதிகம் காட்சிகள் இருக்காது என்பதை நாம் அறிந்தது தான் ஆனால் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டேவிற்கு நிறைய காட்சிகள் இருக்கிறதாம்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு முன்பாக  ராதே ஷ்யாம் என்ற திரைப்படத்தில் stand-up பெண் காமெடியன் வேடம் கிடைத்துள்ளதாம் இதற்காக அவர் பக்கம் பக்கமாக நிறைய டயலாக் மனப்பாடம் செய்துள்ளதாகவும் அதுமட்டுமல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு இந்த திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளாரார் என்று  இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

pooja hegde2
pooja hegde2

மேலும் இந்த திரைப்படம் 400 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாகி பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ளது என்பது நமக்குத் தெரிந்தது தான் இந்நிலையில் இந்த stand-up பெண் காமெடியன் வேடம் இவருக்கு கிடைத்தது மிகவும் பெருமையாக இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த கதாபாத்திரத்தில் இவர்தான் முதன்முதலாக நடிக்கிறாராம்.

Leave a Comment