ஐந்தாவது நாட்கள் வசூலில் காலை வாரிவிட்ட பொன்னியின் செல்வன் 2.? அட இவ்வளவு குறைந்து விட்டதா..

0
ps2
ps2

இயக்குநர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இவரது இயக்கத்தில் வெளியான முதல் பாகத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்ததை தொடர்ந்து இந்தத் திரைப்படம் ரசிகர்களிடமும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் வசூல் கடந்த நான்கு நாட்களில் நன்றாக வசூல் செய்த நிலையில் தற்போது ஐந்தாவது நாட்கள் வசூல் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கடந்த ஐந்து நாட்களில் சுமார் ரூ.215 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

ஆனால் நான்கு நாட்களில் வசூல் நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் ஐந்தாவது நாளில் இருந்து குறைய தொடங்கியுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதனால் எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா என பலவிதமான கேள்விகளை ரசிகர்களும் எழுப்பி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நேற்று மட்டும் வெளிநாடுகளில் படுமோசமாக வசூல் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள்,நடிகைகள் பலரும் படத்தின் புரமோஷனுக்காக பல நகரங்களுக்கு சென்று வந்ததை நாம் பார்த்திருப்போம்.ஆனால் தற்பொழுது 4 நாட்களில் நன்றாக வசூல் செய்து வந்த இந்த திரைப்படம் எதற்காக ஐந்தாவது நாளில் வசூல் கம்மியாகிவிட்டது என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

ps2
ps2

என்றாலும் பல ரசிகர்களும் மே மாதம் தொடங்கி விட்டது பலரும் குடும்பத்துடன் சென்று இந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை பார்ப்பார்கள் எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் வசூல் அதிகமாக செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.