இதுவரை பொன்னியின் செல்வன் 2 உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.?

கடந்த சில நாட்களாகவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியான இந்த இரண்டாம் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் ஓரளவு வசூல் செய்து விட்டது. மேலும் முதல் பாகம் வெளியான பொழுது பல ரசிகர்களும் முதல் பாகத்தை ஏக போக வரவேற்புடன் கொண்டாடி வந்தார்கள்.

இந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் பார்த்தால் தற்பொழுது இரண்டாம் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றாலும் முதல் பாகத்தின் வசூலை தாண்ட முடியவில்லையாம்.

அந்த வகையில் பார்த்தால் இந்த திரைப்படத்தில் நடித்த பல பிரபலங்களும் தற்பொழுது நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடித்த விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா போன்ற பிரபலங்களின் நடிப்பு மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த திரைப்படம் மொத்தமாக ரூ.330 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

அதேபோல் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.120 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.மேலும் இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பல ரசிகர்களும் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

thrsha
thrsha

Leave a Comment