வசூலில் அடிவாங்கும் பொன்னியின் செல்வன் 2.? ஆனாலும் தமிழகத்தில் மட்டும்.?

தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு இந்த பொன்னியின் செல்வன் கதை மிகவும் பிடித்து போக முதல் பாகத்தை இயக்கி வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் பல நாட்கள் ஓடியது.

மட்டுமல்லாமல் முதல் பாகம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து நல்ல விமர்சனமும் அதிகப்படியான வசூலும் கிடைத்தது.இந்த முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தையும் எடுத்து இந்த இரண்டாம் பாகம் கடந்த 28ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

அதிலும் குறிப்பாக தொடர்ச்சியாக நான்கு நாட்களில் வசூல் அதிகமாக இருந்துள்ளது எனவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து பார்த்தால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அதிக வசூலை பெறும் என பட குழு நம்பிய நிலையில் ஆனால் கடந்த சில நாட்களாக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அதிகப்படியான வசூலை பெறவில்லையாம்.

ஆம் இந்த இரண்டாம் பாகம் வெளியாகி ஒன்பது நாட்களில் இந்த திரைப்படம் உலக அளவில் ரூ.265 கோடிக்கு மேல் வசூல் செய்ததாம் அதேபோல் தமிழகத்தில் மட்டுமே ரூ.100 கோடியை கடந்து பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறதாம். ஆனால் இந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் உலக அளவில் வசூல் ரூ.500 கோடியை தாண்டியதாம்.

இரண்டாம் பாகம் இந்த முதல் பாகத்தின் சாதனையை முறியடிக்குமா என பல ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றன.மேலும் இந்த இரண்டாம் பாகம் மே மாதத்தை குறி வைத்து வெளியாகி உள்ளதால் படம் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகம் வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

ps2
ps2

Leave a Comment