இதுவரை பொன்னியின் செல்வன் 2 எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.? இன்னும் கொஞ்சம் வந்து விட்டால் ஹிட் படமாக மாறிவிடுமே..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வரலாற்று சார்ந்த பொன்னியின் செல்வன் கதையை எப்படியாவது படமாக எடுத்து விட வேண்டும் என்று பல பிரபலங்களும் முயற்சித்து பார்த்துவிட்டு கைவிட்ட பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்னம் அவர்கள் துணிச்சலாக இரண்டு பாகங்களையும் எடுத்து வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் பார்த்தால் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இரண்டாம் பாகமும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் நன்கு வசூல் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜெயம் ரவி,விக்ரம்,கார்த்தி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் பல சினிமா பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த இரண்டு பாகங்களுக்குமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்துள்ளார்கள்.

மேலும் இரண்டாம் பாகத்தின் வசூல் எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது அதன்படி பார்த்தால் முதல் பாகத்தின் வசூலை முறியடித்து விடுமா இந்த இரண்டாம் பாகம் என பலவிதமான கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வரும் நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகி இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்த்தால் தற்பொழுது வரை உலகம் முழுவதும் ரூ.225 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். மேலும் இந்த மாதத்தில் எப்படியாவது பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் பாகத்தின் வசூலை விட அதிகம் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் கூறிவரும் நிலையில் பொன்னியின் செல்வன் 2 ஹிட் படமாக அமைய இன்னும் ரூ.75 கோடி வசூலிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

vikram
vikram

மே மாதத்தை குறிவைத்து படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவிற்கு எப்படியாவது போட்ட பட்ஜெட்டை விட கொஞ்சம் அதிகமாக வசூல் செய்து விட்டால் படக்குழுவிற்கு மகிழ்ச்சி அளிக்கும் என ஒரு சில ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment