எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை எனக்கு ஜோடி நயன்தாரா தான்.!அடம்பிடிக்கும் 65 வயது நடிகர்.!

வெள்ளித்திரையில் திண்ணையில் இருந்தவனுக்கு திடுக்கென்று வந்து தாம் கல்யாணம் என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடிஎடுத்து வைத்து அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து தற்போது பிரபல நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகை என்றால் அது நயன்தாரா தான்.

லேடி சூப்பர்ஸ்டார் ஜெயலலிதாவுக்குப் பிறகு இவர்தான் பெண் நடிகைகளில் அதிக ரசிகர் வட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார் என்னதான் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அதையெல்லாம் காதிலேயே வாங்காமல் சென்று கொண்டிருக்கும் நடிகையும் இவர்தான் என்று கூறலாம்.

குடும்ப கதாபாத்திரத்திற்கும் ஏற்ப கமர்ஷியல் கதாபாத்திரத்திற்கு ஏற்ப சரியாக திரைப்படத்தில் நயன்தாரா நடித்து விடுவார்.மேலும் தெலுங்கு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக சிரஞ்சீவி தனது அடுத்த திரைப்படத்திற்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் மலையாளத்தில் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட்டான லூசிபர் என்ற திரைப் படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல் இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது இந்நிலையில் தெலுங்கில் இந்த திரைப் படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று இருக்கிறாராம் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாராவை எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என சிரஞ்சீவி உறுதியாக உள்ளாராம்.

இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடிப்பதற்கு எத்தனை கோடி கேட்டாலும் உடனே அவருக்கு தந்துவிட வேண்டும் என படக்குழுவினர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்களாம்.இந்நிலையில் இந்த தகவலை அறிந்த கோலிவுட் வாசிகள் எப்படி இவருக்கு மட்டும் வயது ஏற ஏற நிறைய சம்பளம் வாங்குகிறார் என நயன்தாராவின் மேல் பொறாமையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் எதற்காக நயன்தாராவை இவருடன் ஜோடி போடுகிறார்கள் என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Chiranjeevi

Leave a Comment

Exit mobile version