வீரன் படப்பிடிப்பு தளத்தில் பம்பரம் விட்டு விளையாடும் ஹிப் ஹாப் ஆதி.! வைரலாகும் வீடியோ..

0
veeran
veeran

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும்,நடிகராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி இவரது நடிப்பில் வெளிவந்த ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக ஓரளவுக்கு வசூல் செய்துள்ளதால் தொடர்ச்சியாக இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகிக்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பார்த்தால் இவர் நடிப்பில் வெளியான நட்பே துணை,நான் சிரித்தால்,அன்பறிவு போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

மேலும் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வீரன் புதிய கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் இந்த திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் எனவும் பல ரசிகர்களும் கூறிவரும் நிலையில் தற்போது இவர் வீரன் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் சிறுவர்களுடன் பம்பரம் விட்டு விளையாடி உள்ளார்.

மேலும் அப்பொழுது எடுத்த வீடியோவை தற்பொழுது இவர் தனது twitter பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து ஹிப் ஹாப் ஆதி நன்றாக பம்பரம் விட்டு விளையாடுகிறார் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து பார்த்தால் இவரது நடிப்பில் இன்னும் உருவாகி வரும் திரைப்படங்களைப் பற்றியும் இவரது ரசிகர்கள் நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் திரைப்படங்களைப் பற்றி அப்டேட் இருந்தால் வெளியிடுங்கள் என்றும் கேட்டு வருகிறார்கள்.