ஐந்து பிள்ளைகள் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்பது போல் ஐந்து படத்தை தயாரித்து பூண்டியான வெற்றிமாறன்.?

vetrimaran
vetrimaran

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வந்துள்ள திரைப்படம் தான் விடுதலை இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் மேலும் இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்து தோல்வி அடைந்த திரைப்படங்களை பற்றி தான் நாம் தற்பொழுது பார்க்க இருக்கிறோம்.

நான் ராஜாவாக போகிறேன்: நகுல் மற்றும் சாந்தினி நடித்திருந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ப்ரித்வி ராஜ்குமார் தான் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படம் வெளியான பொழுது மக்களிடையே நல்ல வரவேற்பு பெறவில்லை குறிப்பாக இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் தான் திரைக்கதை எழுதியதாம்.

உதயம் NH4 : இயக்குனர் வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரான மணிமாறன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் நடிகர் சித்தார்த் மற்றும் புதுமுக நடிகை அஷ்ரிதா செட்டி நடித்த இந்தத் திரைப்படத்திற்கும் திரைக்கதை,வசனம் எழுதி தயாரித்தது வெற்றிமாறன் தான் பல வருட காலமாக இருந்த இந்த கதை படமாக்கப்பட்டது வெற்றிமாறனுடன் இணைந்து தயாநிதி அழகிரி இந்தப் படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பொறியாளன் : இயக்குனர் வெற்றிமாறன் தனது நண்பர் மணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரித்த திரைப்படம் தான் பொறியாளன் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் கயல் ஆனந்தி மிகவும் அற்புதமாக நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதே போல் இந்த திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அண்ணனுக்கு ஜே : புதுமுக இயக்குனர் ராஜ்குமார் இயக்கிய இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் இணைந்து நடித்த இந்த திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்தார் இன்றைய காலகட்ட அரசியலை கலாய்க்கும் விதமாக இருந்த திரைப்படம் என்றே கூறலாம்.

சங்கத் தலைவன் : இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரகனி,கருணாஸ்,ரம்யா சுப்ரமணியன் மற்றும் பலர் நடித்திருந்தனர் மேலும் இந்த திரைப்படத்தையும் இயக்குனர் வெற்றிமாறன் தான் தயாரித்தார் ஆனால் படம் சரியாக ஓடவில்லையாம்.

vetri-maran
vetri-maran