கவுண்டமணியை புறக்கணித்த தமிழ் சினிமா அதுவும் இந்த ஒரே ஒரு ஆசைக்காக.!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களை அதிகம் கவர்ந்த நடிகர் என்றால் அது கவுண்டமணி தான் இவர் அந்த காலத்தில் நடிக்காத திரைப்படங்களே இல்லை என்ற அளவிற்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார் அதிலும் குறிப்பாக இவருக்கு எடுபிடியாக செந்திலை அழைத்துக் கொள்வார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து அந்த காலத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும் அதிலும் குறிப்பாக செந்தில் இல்லாமல் கவுண்டமணி நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார் அவ்வாறு கவுண்டமணி நடித்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் வந்து விடுகிறது அதைப்போல கவுண்டமணிக்கும் அந்த ஆசை வந்துள்ளது ஆம் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்க வேண்டும் என முடிவு செய்து கிட்டத்தட்ட ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ளார் ராஜா எங்க ராஜா,ஒரு நல்லவன் ஒரு வல்லவன் போன்ற 5 திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் இதில் ஒரே ஒரு திரைப்படம் மட்டும் அவருக்கு வெற்றி கொடுத்துள்ளது.

தொடர்ந்து நான் கதாநாயகனாக தான் நடிப்பேன் என கூறி ஒரு சில திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் இருப்பினும் அவருக்கு பெரிதாக எந்த திரைப்படமும் வெற்றி கொடுக்கவில்லை இவர் கடைசியாக நடித்த 49-ஓ திரைப்படம் வயது முதிர்வு அப்படியே தெரிந்ததால் இவரை கதாநாயகனாக இவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை இருப்பினும் இவருக்கு ஒரு படம் கை கொடுத்து விட்டது.

இதனை தொடர்ந்து ஒரு சில வருடங்கள் இவர் நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதால் காமெடி நடிகனாக ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்புகள் வந்து உள்ளது ஆனால் அதனை தவிர்த்து விட்டார்.

இதனால் இவருக்கு சினிமாவில் காமெடி நடிகனாக நடிப்பதற்கு கூட எந்த இயக்குனரும் வாய்ப்புகள் தரவில்லை என்று தான் கூற வேண்டும்.ஆனால் தற்பொழுது காமெடி நடிகனாக நடிக்கும் பல நடிகர்களும் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்று வருகிறார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

Leave a Comment